திருப்பூர் : முறையான ஆவணங்கள் இன்றி பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வந்த 12 வங்கதேச இளைஞர்களை போலீசார் கைது செய்து, போலி ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டி பகுதியில், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆட்கள் சிலர் பாஸ்போர்ட் உட்பட எவ்வித முறையான ஆவணங்களும் இல்லாமல் தங்கியிருப்பதாக காவல்துறைக்குத் தகவல் வந்தது. கடந்த 8 -ம் தேதி கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர். அச்சோதனையில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சபுஷ் மற்றும் அப்துல் ரஷிஷ் ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாகத் தங்கியிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களைக் கைது செய்த 15. வேலம்பாளையம் போலீசார், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜரபடுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் மேலும் யாராவது சட்டவிரோதமாக தங்கியிருக்கிறார்களா என்று தொடர்விசாரணையும் நடத்தினர். இந்நிலையில், இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சிறுபூலுவபட்டி பகுதியில் சுற்றித்திரிந்த 12 பேரைப் பிடித்து விசாரித்தனர்.

அதில், முகமது சலீம் காஜி என்பவர் கடந்த 2017 -ம் ஆண்டு கள்ளத்தோனி மூலம் இந்தியாவிற்குள் நுழைந்தது, அதன் பின் திருப்பூர் வந்து பனியன் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். இங்கு நல்ல வருமானம் வந்ததால் பங்களாதேஷில் உள்ள தனது நண்பர்களையும், தெரிந்தவர்களையும் கள்ளத்தோனி மூலம் இந்தியாவிற்கு வரவழைத்துள்ளார். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அவர்களைப் பணிக்கு அமர்த்தி, புதிய பணியாளர்களை வேலைக்குச் சேர்த்ததாக நிறுவன உரிமையாளர்களிடமிருந்து கமிஷன் தொகையும் பெற்றுள்ளார்.

அதன்படி, அவருடன் இருந்த பஜ்லுல் ஹக், முகமது ரோனி ஷேக், முகமது ரிடாய் ஷேக், முகமது ரசிதுல் ஹக், முகமது லிடான், பஷார், முகமது ராபின் ஹுசைன், இப்ராஹிம் காஸி, முகமது மமுன் பிஷ்வாஸ், முகமது அன்வர் ஹுசைன், டெலோவார் ஹுசைன் ஆகியவர்கள் பங்களாதேஷ் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக நுழைந்து எவ்வித ஆவணங்களுமின்றி தங்கியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவர்கள் 12 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த இந்திய அடையாள அட்டையான ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்து திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம் எண் இரண்டில் ஆஜர்படுத்தினர். அந்த விசாரணைக்குச் சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, புழலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதைப்போலவே, கடந்த அக்டோபர் 8 -ம் தேதி வங்கதேசத்தினர் போலி ஆதார் கார்டுகளுடன் பிடிபட்ட நிலையில், தற்போது மேலும், 12 பேர் போலி ஆதார் கார்டுகளுடன் பிடிபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.