கோவை : தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் செங்கல் சூளைகளினால் சட்டவிரோதமாக செம்மண் அள்ளுவதை தடுக்கும் வகையில், புவியியல் மற்றும் கனிமவளத் துறையின் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை புறநகர் பகுதியில் உள்ள ஆனைகட்டி மெயின் ரோடு, தடாகம், சின்னத்தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், மாங்கரை, காளையனுார் உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் ஆண்டு முழுவதும் பல லட்சம் டன் செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. விதிமுறைப்படி, 3 அடிக்கு மேல் மண் தோண்டக்கூடாது. ஆனால், பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுரங்கம் போல் மலையை ஒட்டிய பகுதிகளில் தோண்டி, லாரிகள் மூலம் சூளைகளுக்கு மண் கடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சட்டவிரோதமாக கனிம வளங்கள் சுரண்டப்படுவது குறித்த விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாகவும், கனிமவளத்துறைக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை புவியியல் மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் செம்மண் கடத்துவதற்காக லாரிகள் செல்லும் பாதையை ஆய்வு செய்தனர். அப்போது, கனரக வாகனங்கள் செல்ல முடியாதவாறு, அந்த மண் பாதைகளில் கற்களால் ஆன தடுப்புகளை நட்டனர்.