ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் பதவி ராஜினாமா

டெல்லி : ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.


டெல்லி : ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 

ரூபாய் விலை வீழ்ச்சியை சமாளிப்பது, பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துவது, வட்டி விகித நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனால், கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று உர்ஜித் படேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனது சொந்த காரணங்களுக்காகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறிய அவர், தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கடிதம் எழுதியுள்ளார். 

முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதவி விலகியதையடுத்து உர்ஜித் படேல் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, உர்ஜித் படேலின் பதவி ராஜினாமா குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். "ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேலின் ராஜினாமா வங்கித் துறைக்கு பெரிய இழப்பாகும். ரிசர்வ் வங்கியில் நிதி நிலைத் தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் படேல். தொலைநோக்கு பார்வை கொண்ட மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் உர்ஜித் படேல்," இவ்வாறு புகழாராம் சூட்டியுள்ளார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...