கோவை : மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சோமையனூர் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : மின்சாரம், சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சோமையனூர் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தடாகத்தை அடுத்த சோமையனூர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த ஓராண்டு காலமாக சாலை, குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறிய அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :- தங்கள் பகுதி மலையடிவாரத்தில் அமைந்திருப்பதால் சாலை வசதி இல்லாமல் பள்ளி குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மழைக்காலத்தில் வாகனத்தில் செல்வோர் வழுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும், அடிக்கடி மின்சார இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக, மாலை நேரங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இதனால், மாணவர்கள் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், சாலையில் மின்சார வசதி இல்லாததால், அப்பகுதியில் நடமாடும் காட்டு யானைகளைக் கண்டுகொள்ள முடியாமல், மனித - விலங்குகள் மோதலால், உயிர்பலி ஏற்படும் நிலை உள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.