கோவை : சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு நீதிமன்றம் வழங்கிய பதவி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும் என சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகதீசனார், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :- சிலை கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கடந்த 30-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். சிலை கடத்தல் வழக்கை சிறப்பான முறையில் விசாரித்து வந்ததைத் தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கும், அவரது தலைமையிலான விசாரணை குழுவிற்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதை திரும்பப் பெறவேண்டும்.

மேலும், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நேர்மையாகவும், தைரியமாகவும் செயல்பட்டு, தமிழக கலை பொக்கிஷங்களான விலை மதிக்க முடியாத சிலைகளை மீட்டு உள்ளது. ஸ்காட்லாந்திற்கு அடுத்தபடியாக தமிழக காவல்துறையின் சிறப்பாக செயல்பாடுகள் இம்மாதிரியான நேர்மையான அதிகாரிகளால் தான் சாத்தியமாகிறது. தமிழக அரசின் மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும், இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.