யானைகளை விரட்டாவிட்டால் டிச.17 -ம் தேதி முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் :கட்சி சார்பற்ற விவசாயிகள் முடிவு

கோவை : பெரிய தடாகம் பகுதியில் சுற்றிதிரியும் காட்டுயானைகளை இடமாற்றம் செய்யாவிட்டால் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை 17 -ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை : பெரிய தடாகம் பகுதியில் சுற்றிதிரியும் காட்டுயானைகளை இடமாற்றம் செய்யாவிட்டால் சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை 17 -ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை, பெரியதடாகம் மற்றும் ஆனைகட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரியும் இரு காட்டு யானைகளைப் பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் காட்டு யானைகளைப் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விடும்படி வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

ஆனால், காட்டு யானைகளைப் பிடிக்க துரித முறையில் நடவடிக்கை எடுக்காத வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயன்று வருகின்றனர். இந்நிலையில், காட்டு யானைகள் மீண்டும் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் வந்து செல்கின்றன. எனவே, இன்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் காட்டுயானைகளைப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் மனு அளித்துள்ளனர். 



இது குறித்து விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கந்தசாமி கூறுகையில், "காட்டு யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் உத்ரவிட்டும் வனத்துறை அதிகாரிகள் அதைச் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். யானையைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு எடுக்கவில்லையெனில் வனத்துறையை கண்டித்து வரும் 17 ம் தேதி சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போகிறோம்," என தெரிவித்தார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...