நீலகிரி : உதகையில் நடைபெற்ற 3- வது திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற சிறந்த 5 படங்களுக்கு இயக்குநர் பாரதிராஜா தங்க யானை விருது வழங்கி கெளரவித்தார்.

ஊட்டி பிலிம் சொசையட்டி சார்பில் 3 -வது ஊட்டி குறும்படவிழா கடந்த 7 -ம் தேதி உதகையில் உள்ள அசெம்பிளி திரையரங்கில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 90 குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் சிறந்த படம் நடிப்பு, ஒளிப்பதிவு, திரைக்கதை, இயக்குநர் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 குறும் படங்களை மலையாள பட இயக்குநர் ஜாய் மேத்யூ தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று நிறைவடைந்த இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "குறும்படம் எடுப்பது என்பது பெரிதல்ல. குறும்படம் என்பது வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அதில் என்ன கருத்து சொல்ல வருகிறோம் என்ற படைப்புருவாக்கம் என்பது தெளிவாக இருக்க வேண்டும்.
தற்போது புத்தக வாசிப்புப் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதனுடைய குறும்படம் என்பது சிறுகதையாக உள்ளது. திரைப்படம், நாவலாக உள்ளது. சென்னையில் திரைப்பட விழா நடத்துவது சுலபம். ஆனால், ஊட்டியில் நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதனைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்," என்றார்.
இதையடுத்து, 3 -வது ஊட்டி குறும்பட விழாவின் சிறந்த படமாக, இத்தாலியைச் சேர்ந்த இலியானா இயக்கிய 'பாடி சிட்டி' என்ற குறும்படம் தேர்வு செய்யப்பட்டு தங்க யானை விருது வழங்கப்பட்டது. அருண்குமார் கணேசனின் 'வுமன் நெட்வொர்க்' என்ற குறும்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தங்கயானை விருது வழங்கப்பட்டது.

'காவல் தெய்வம்' குறும்படத்தில் நடித்த சரண்யா ரவிக்கு சிறந்த நடிப்பிற்கான விருதும், 'பில்டர் காபியும் ரெட் வைன்' படத்திற்குச் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதும், 'வுமன் நெட்வொர்க்' குறும்பட இயக்குநர் அருண்குமார் கணேசனுக்கு சிறந்த இயக்குநருக்கான தங்க யானை விருதும் வழங்கப்பட்டது.

இதற்கிடையில், 2 ஆண்டுகள் லண்டனில் இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் தயாரான அவர் நடித்த கனவு திரைப்படம் 'ஓம்' திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.