கோவை : கோவையில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

கோவை மாநகரில் உள்ள ஆர்.எஸ்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சங்கிலி பறிப்பு, வழிப்பறி போன்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கோட்டைமேட்டைச் சேர்ந்த ரியாசுதீன் (23) என்பவரை கடந்த மாதம் 15-ம் தேதி ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், ரியாசுதீனை போலீஸ் விசாரித்ததில் சிங்காநல்லூர் பகுதிகளிலும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு, வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் மற்றும் செயினை பறித்து செல்வதும், கத்தியைக் காட்டி மிரட்டி பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் உறுதி செய்யப்பட்டு, மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் பரிந்துரையின் பேரில், காவல் ஆணையாளர் சுமித்சரண், ரியாசுதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.