கோவை : கோவை மாநகராட்சியில் ரூ.1 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.92 மதுரைவீரன் கோவில் வீதி (வெங்கிடு தோட்டம்) பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், வார்டு எண்.93 மின்நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பனியினையும் தொடங்கி வைத்தார்.
இதேபோல, வார்டு எண்.93 சௌபாக்கியா அவென்யூ பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், வார்டு எண்.87 குனியமுத்தூர் பாரதிநகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.37.90 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் அமைக்கும் பணியினையும் ஆக மொத்தம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை மாண்;புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையர் தி.ரா.ரவி, உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.