ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது :அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பி.கே.புதூர் பகுதியில் ரூ. 2.95 கோடி மதிப்பில் குனியமுத்தூர் - இடையர்பாளையம் முதல் கோவைப்புதூர் வரையிலான நான்கு வழித்தடத்தை, பல்வழித்தடமாக மேம்படுத்துவதற்கான பூமிபூஜையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், கோவையில் பல்வேறு சாலை விரிவாக்கத்தினால் விபத்துகள் 80 சதவீதம் வரை குறைந்துள்ளது. தமிழகத்தில் எந்த தொகுதியிலும் இல்லாத வகையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் சாலை, பால வேலைகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கும் வகையில் பணிகள் நடந்து வருகிறது. இத்தொகுதியில் கட்சி, சாதி வேறுபாடு இன்றி சகோதரத்துவத்துடன் பழகி வருகிறேன்.



இதையடுத்து,செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.பி.வேலுமணி கூறியதாவது :- ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் நிலை எப்போதும் மாறாது. அந்த ஆலையை திறக்க முயற்சி என்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. என்றார். 

சமூக வலைதளங்களில் சாதி ரீதியிலான கருத்துகள் பரப்படுவது குறித்த கேள்விக்கு, இது ஆரேக்கியமாக இருக்காது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை எந்தவித சாதிய வேறுபாடு இன்றி இருந்து வருகிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...