திருப்பூர் : திருப்பூரில் நடைபெற்ற அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேட்டியளித்தார்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் உழைக்கும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 643 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி 60 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பரவி வரும் கோமாரி நோயை குறைக்கும் வண்ணம் ஈரோட்டில் 85 மருத்துவ குழுக்களும், திருப்பூரில் 45 குழுக்களும் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதனால் கோமாரி நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக, இந்நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வரும் 25 -ம் தேதி வரை கால்நடை சந்தை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது," என்றார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் போயஸ்கார்டனை குறித்து எழுப்பிய கேள்விக்கு, "போயஸ்கார்டனை பொருத்தவரை அது எங்கள் அம்மா வாழ்ந்த வீடு, கோவிலாகக் கருதப்படுகிற அந்த இடத்தில் யாரும் எதும் சொல்ல முடியாது," என பதிலளித்தார்.