இன்று முதல் வரும் சனிக்கிழமைகளில் நீலகிரி சிறப்பு மலைரயில் சேவை

கோவை : சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலைரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை : சுற்றுலாப்பயணிகளின் வசதிக்காக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலைரயில் போக்குவரத்து இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலைரயில் இயக்கம் இன்று தொடங்கியுள்ளது. ஏற்கனவே, மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினமும் காலை 7.10 மணியளவில் மலைரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இந்தக் கூடுதல் சிறப்பு மலைரயில் இயக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சிறப்பு மலைரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.10 -க்கு புறப்பட்டு மதியம் 12.30 -க்கு குன்னூர் நிறுத்தத்தைச் சென்றடையும். இந்த மலைரயில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தவறாமல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும், 132 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு மலைரயிலில் முதல் வகுப்புக்கு 16 இருக்கைகள், அதற்கு கட்டணமாக ரூ.1210 மற்றும் இரண்டாம் வகுப்புக்கு கட்டணம் ரூ. 815 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ. 200 மதிப்பிலான பரிசுப்பொருட்களை ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது. 

வாரத்தில் சனிக்கிழமை நாட்களில் மட்டும் இயக்கப்படும் இந்தச் சிறப்பு மலைரயில் தினமும் இயக்கப்படுகையில் இடம் கிடைக்காத பயணிகளுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என சுற்றுலாப்பயணிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...