திருப்பூர்: திருப்பூரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

முன்னதாக, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டதோடு, மாணவ, மாணவிகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான துணியிலான பைகள் வழங்கப்பட்டது.