நீலகிரி : பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய அரசுக்கு நீலகிரி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் இன்று உதகை தபால் நிலையத்தில் விரைவு தபால் அனுப்பப்பட்டது.
நீலகிரி : பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், ராமர் கோவில் கட்ட அவசர சட்டம் கொண்டுவர வலியுறுத்தி மத்திய அரசுக்கு நீலகிரி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் இன்று உதகை தபால் நிலையத்தில் விரைவு தபால் அனுப்பப்பட்டது.

சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்களின் ஒருவரும், மத்திய அமைச்சருக்கான உமாபாரதி, பா.ஜ.க.வால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டும் திறமை இல்லை என அவர் கூறியிருந்தார். பா.ஜ.க.,விற்கு போதிய பலம் மக்களவையில் இருந்தாலும், மாநிலங்களவையில் பலம் இல்லாததால் தான் அயோத்தியில் ராமர்கோவில் கட்ட முடியவில்லை என ராஜ்நாத்சிங் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆட்சி முடியும் தருவாயில் உள்ள பா.ஜ.க. அரசு மக்களவையில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும், ராமர்கோவில் கட்ட அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி நீலகிரி மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடிக்கு உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், சிவசேனா கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக நீலகிரி மாவட்ட சிவசேனா கட்சி அறிவித்துள்ளது.

இதனிடையே, பாபர் மசூதி இடத்தை இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், உச்சநீதிமன்றம் பாபர் மசூதி வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உதகை ஏ.டி.சி சுதந்திர திடல் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
