ஈரோடு : ஈரோட்டில் நடைபெற்று வரும் 'வீவ்ஸ்' ஜவுளிக் கண்காட்சி மற்றும் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு மற்றும் டெக்ஸ்வேலி இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சி ஜவுளி விற்பனை அரங்கில் நேற்று தொடங்கியது. 8-ம் தேதி வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில், நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதில், சுமார் 250-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தக் கண்காட்சியில் நுகர்வோர் - விற்பனையாளர்களின் மூலம் ரூ.800 கோடி வருமானம் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 6,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-ம் நாளான இன்று ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் விதவிதமான ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.