பழனியில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு தடுப்பூசி

திண்டுக்கல் : பழனியில் பொதுமக்கள் சவாரி செய்ய பயன்படுத்தும் குதிரைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கத் தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் விலங்குகள் நலவாரியம் சார்பில் தடுப்பூசி போடப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.


திண்டுக்கல் : பழனியில் பொதுமக்கள் சவாரி செய்ய பயன்படுத்தும் குதிரைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கத் தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் விலங்குகள் நலவாரியம் சார்பில் தடுப்பூசி போடப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. 



திண்டுக்கல், பழனியில் உள்ள குதிரைகள் மற்றும் நாய்களுக்குக் கடந்த சில வருடங்களாகக் கொடைக்கானலை சேர்ந்த விலங்குகள் நலப் பாதுகாப்பு மையம், ஊட்டியைச் சேர்ந்த உலக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசிகள் போட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, குதிரைகளுக்கான இரண்டு நாள் மருத்துவமுகாம் நடைபெற்றது. 

கொடைக்கானல் விலங்குகள் நலப் பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் ஜனனி கிருஷ்ணமூர்த்தி, பழனி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாவிநாதன், ஊட்டி உலக விலங்குகள் பாதுகாப்பு மையத்தின் மருத்துவர்கள் மேக், ஸ்டேசி, சேஷா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் குதிரைகள் உள்ள‌ இடங்களுக்குத் தேடிச்சென்று சிகிச்சை வழங்கினர். 



பழனி அடிவாரம், மின்இழுவை ரயில்நிலையம், ரோப்கார், பேருந்து நிலையம், ரயில்நிலையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 113 குதிரை வண்டிகள் இருப்பதைக் கண்டறிந்த குழுவினர், அந்தந்த இடத்திற்கே சென்று குதிரைகளுக்குத் தடுப்பூசி போட்டதுடன், குடல்வால் பூச்சிக்கான மருந்துகளைக் கொடுத்தனர். மேலும், குதிரைகளின் பல், கால்குளம்புகளில் ஏதேனும் பிரச்சினை இருப்பின் அதற்கான மருந்துகளையும் கொடுத்தனர். 

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாம் இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், நாய்களுக்கான முகாம் விரைவில் நடைபெறும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...