கோவை : கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கோவை : கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
வடவள்ளி லிங்கனூர் அண்ணாநகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பிரஜேஸ்வரன் (22). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் இன்று காரமடை வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சண்முகபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, இவரது வாகனத்தின் மீது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த விபத்தில் பிரஜேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவரின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.