நீலகிரி : உதகை நகராட்சி பில் கலெக்டர் பதவிக்காக லஞ்சம் கேட்டதாக கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவரது கணவர் கூடலூர் நகராட்சியில் ஓட்டுநராக பணிபுரிந்து, பணியின் போது உயிரிழந்தார்.
இதனால், கருணை அடிப்படையில் வாரிசுதாரர் வேலைக்காக சித்ரா விண்ணப்பித்தார். கூடலூர் நகராட்சியில் காலி பணியிடம் இல்லாததால், உதகை நகராட்சியில் பில் கலெக்டர் பதவிக்கு விண்ணப்பித்து, பணி கிடைத்தது.
ஆனால், அப்போதைய உதகை நகராட்சி ஆணையர் சர்தார் மற்றும் மேலாளராக இருந்த .பார்வதி ஆகியோர் பணியாணை வழங்க ரூ. 2 லட்சம் கேட்டுள்ளனர். இது குறித்து சித்ரா லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சித்ராவிடம் பணத்தை சர்தார் மற்றும் பார்வதியிடம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சித்ரா ரூ. 2 லட்சம் பணத்தை புரட்ட முடியவில்லை. இதற்கிடையே, சித்ரா லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளதை எப்படியோ அறிந்த ஆணையர் சர்தார் மற்றும் மேலாளர் பார்வதி ஆகியோர் பணியாணை வழங்கினர்.
இதனிடையே, சர்தார் காஞ்சிபுரம் ஆணையராகவும், பார்வதி கூடலூர் ஆணையராகவும் பணி மாற்றம் செய்யப்பட்டனர். சித்ரா வழங்கிய புகாரின் அடிப்படையில், நகராட்சி ஆணையர் சர்தார் மற்றும் மேலாளர் பார்வதி ஆகியோரின் வீட்டை சோதனையிட உதகை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து, இருவர் வீட்டிலும் திடீர் சோதனை செய்தனர். இதில், கணக்கில் வராத நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உதகை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையின் அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து, நகராட்சிகளுக்கான தலைமை ஆணையர் சர்தார் மற்றும் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. உதகை ஆணையர் நாராயணன் கூடுதல் பொறுப்பாக கூடலூர் நகராட்சியை கவனிப்பார் என அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.