கோவை : கோவையில் சொத்துக்குரிய நபரின் பெயரில் பட்டா பதிவு செய்து கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பட்டாப் பதிவுகள் என்பது நில உரிமை மற்றும் நில அளவுக்குத் தொடர்பான உள்ளீடுகள் அடங்கியவை. பத்திரப்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க, வருவாய் துறையில் இன்றைய தேதியில் அந்தச் சொத்தின் உரிமையாளர் பெயரை பதிவு செய்ய பட்டாப் பதிவுகள் அவசியமாகத் தேவைப்படுகிறது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பூர்வீக மூலம் பாத்தியப்பட்ட வீடுகள், மனைகள், விவசாய நிலங்களுக்குப் புகைப்படத்துடன் கூடிய பட்டா வழங்கப்படுகிறது. இதில் கோவை தெற்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு, தெற்கு நகரநிலவரித்திட்ட அலுவலகத்தில் வைத்து பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் ஆணைப் பிறப்பித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, "கோவை வார்டு எண் 4 மற்றும் 5 -க்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே அளித்துள்ள நோட்டீஸைப் பெற்ற பட்டாதாரர்கள் இன்னும் 30 நாட்களுக்குள் பட்டா பதிவு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்காத பட்சத்தில் பட்டாவில் ஏற்கனவே இருக்கும் பெயரையே தாக்கல் செய்து உத்தரவிடப்படும்," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பட்டாக்களை வங்கிக்கடன், மாநகராட்சி சொத்துவரி, பாகப்பிரிவினை போன்ற ஆவணப் பதிவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.