நீலகிரி : குன்னுாரில் மறைந்த திராவிட கழக பொருளாளர் பிறைநுதல் செல்வியின் பூதஉடலுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.
நீலகிரி : குன்னுாரில் மறைந்த திராவிட கழக பொருளாளர் பிறைநுதல் செல்வியின் பூதஉடலுக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.

குன்னூர் ரெய்லிகாம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் கவுதமன். இவரது மனைவி டாக்டர் பிறைநுதல்செல்வி (72). இவர்களுக்கு இனியன் என்ற மகனும், யாழிசை என்ற மகளும் உள்ளனர். டாக்டர் பிறைநுதல்செல்வி திராவிடர் கழகத்தின் மாநில பொருளாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது கணவருடன், பிறைநுதல்செல்வியும் திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள சென்னை சென்றனர். விழாவை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து திருப்பூருக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தனர்.

பின்னர், இன்று காலை திருப்பூரிலிருந்து கார் மூலமாக குன்னூர் வந்து கொண்டு இருந்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே கார் வந்த போது எதிரே உதகையிலிருந்து கோவை நோக்கி வந்த கார் ஒன்று திடீரென்று மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாததால், சமரசமாக இருதரப்பினரும் சமாதானமாக சென்றனர். இந்த விபத்தின் போது, பிறைநுதல்செல்வி காரில் பெல்ட் போட்டு வந்ததால், கார் மோதிய வேகத்தில் அதன் கொக்கி வயிற்றில் பட்டுள்ளது. இதனால், அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தால் உடனடியாக சிகிச்சைக்காக குன்னூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்த நிலையில், இன்று அவருடைய பூதஉடலுக்கு திராவிட கழக மாநில தலைவர் கி.வீரமணி நேரில் சென்று அவருடைய இல்லத்தில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- எல்லா தலைவர்களும் எங்களிடம் நேரில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர். குறிப்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்களது உருக்கமான அறிக்கை, மேலும், வைகோ அவர்களின் ஆறுதல் மற்ற தலைவர்களின் இரங்கல் அறிக்கை எல்லா இயக்கங்களைச் சார்ந்தவர்களும் கட்சி வேறுபாடின்றி இறுதி மரியாதை செலுத்தினர். திராவிட கல்வி நிறுவனங்களில் பிறைநுதல் செல்வியின் நினைவு சின்னம் அமைக்கப்படும். ஒருவார காலத்திற்கு திராவிட கழக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.