உதகை - குன்னூர் இடையே ரயில் பஸ் : மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சோதனை ஓட்டம்

கோவை : உதகை - குன்னூர் இடையே இயக்கப்பட உள்ள ரயில் பஸ் இயக்கிப் பார்க்கும் சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

கோவை : உதகை - குன்னூர் இடையே இயக்கப்பட உள்ள ரயில் பஸ் இயக்கிப் பார்க்கும் சோதனை ஓட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் உதகைக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணித்து இயற்கை அழகினை ரசிக்க, உள்நாடு மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில், ரயில்வே சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான உதகைக்குக் கூடுதலாக ரயில் பஸ் சேவையினை துவக்கத் தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. இதன்படி, குஜராத் மாநிலம் அகமபதபாத்லிருந்து ரயில் பஸ் ஒன்று மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்குக் கடந்த மாதம் நவம்பர் 9 -ம் தேதி கொண்டு வரப்பட்டது. 



இன்று மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில், 60 பேர் பயணிக்க கூடிய இந்த ரயில் பஸ் பெட்டி மேட்டுப்பாளையம் பணிமனையில் வைத்துப் பழுதுபார்க்கப்பட்டதோடு, அங்கேயே இயக்கிப் பார்க்கும் சோதனை ஓட்டமும் நடத்தபட்டது. 

மேலும், மேட்டுப்பாளையம் முதல் கல்லார் வரை 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு மலை ரயில் பாதையில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனையினால் இதிலுள்ள சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதனை சீரமைக்கும் பணிக்காக திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. 

குன்னூர் முதல் உதகை வரை இயக்கப்பட உள்ள இந்த ரயில், ஏற்கனவே இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் இருப்புப் பாதையில் இயக்கப்பட உள்ளது. மேலும், ரயில் பஸ் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இருக்கைகள் உட்பட அனைத்தும் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...