கோவையில் சி.சி.டி.வி கேமரா இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞர்களுக்கு போலீசார் வலைவீச்சு

கோவை : கோவையில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : கோவையில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



பெருநகரங்களில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் மிக முக்கியமானது கோவை மாநகரம். இங்கு அதிகரித்துள்ள இருசக்கர வாகனங்களுக்கு ஏற்ப இருசக்கர வாகன கொள்ளைச் சம்பவங்களும் எண்ணிக்கையில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. 

இரவு நேரங்களில் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பிற்கு எந்த உத்திரவாதம் இல்லை. எளிதில் திருடர்கள் அவற்றை திருடிச் செல்கின்றனர். இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் பகுதியில் கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஒன்றை, இளைஞன் ஒருவர் காலை பயன்படுத்தி லாக் எடுத்து, பின்பு அந்த வாகனத்தை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். 



இக்காட்சிகள் அனைத்தும் அந்தக் கடையின் முன் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இளைஞனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாமல், சிறிது தூரம் தள்ளிச் செல்வதும் அங்கிருந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் காத்திருந்த இளைஞன் உதவியுடன் இந்த வாகனத்தை டோப் செய்து செல்வதும் அந்த சி.சி.டி.வி காணொளியில் இருந்தது.

மேலும், திருட்டில் ஈடுபடும் இளைஞர்களின் முகம் தெளிவாக சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...