கோவை : பொதுமக்களின் வசதிக்காக வருவாய்துறை தொடர்பான சான்றிதழ்களை 24 மணிநேரமும் இசேவை திறந்தவெளி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 212 பொதுசேவை/இ.சேவை மையங்கள் மூலமாக தற்போது, 20 வருவாய்த்துறை சான்றிதழ்கள், பட்டா மாறுதல் மற்றும் சமூக நலத்துறை தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ்கள் பெறுவதற்கு நெருக்கடியான காலம் என்பதால் பொதுசேவை மையங்களில் நெருக்கடி ஏற்படுகின்றது.
பொதுசேவை மையங்கள் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இக்காரணத்தினால் மற்ற நேரங்களில் பொதுமக்கள் சான்றிதழ்களை விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்கும் விதமாக, பொதுமக்கள் https//www.tnesevai.tn.gov.in/Citizen என்ற திறந்தவெளி இணையதள முகவரியை பயன்படுத்தி 24 மணிநேரமும் சான்றிதழ்களை வீட்டில் இருந்தே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.