கழிவுநீர் தொட்டி கட்டுவதற்கான குழியில் சிக்கிய இரு ஊழியர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்பு மீட்பு

திருப்பூர் : கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட குழியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக் கொண்ட கூலி தொழிலாளர்கள் 2 பேர், சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் : கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட குழியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிக் கொண்ட கூலி தொழிலாளர்கள் 2 பேர், சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரில் ஷேக் என்பவரின் வீட்டில் செப்டிக் டேங்க் அமைக்கும் பணியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சின்ராசு, லோகு ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனர். 10 ஆழமுள்ள குழியை இருவரும் தோண்டி கொண்டிருந்த பொழுது, மேலே இருந்த மண் சரிந்ததில் இருவரும் குழியில் சிக்கினர். இருவரின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்து வந்த பொதுமக்கள், மண்ணில் சிக்கி தவித்த சின்ராசு என்பவரை முதலில் மீட்டனர். மேலும், மண் சரிவு அதிகமாக ஏற்பட்டதில் லோகுவின் உடல் மண்ணில் சிக்கி கொண்டது. தொடர்ந்து பொதுமக்கள் ஒரு மணி நேரம் போராடி லோகுவையும் மீட்டனர். இதில், லோகுவின் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.



அதனைத் தொடர்ந்து, இருவரையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செப்டிக் டேங்க் தோண்டும் பணியின் போது, இரண்டு கட்டிட தொழிலாளிகள் மண்சரிவில் சிக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...