அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமெனக் கோரி இந்து அதிரடிப்படையினர் யாத்திரை

கோவை : அயோத்தியில் ராமர் கோவில் கட்டச் சிறப்பு சட்டம் இயற்றுவோம் என்ற பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன்சம்பத் குற்றம்சாட்டினார்.

கோவை : அயோத்தியில் ராமர் கோவில் கட்டச் சிறப்பு சட்டம் இயற்றுவோம் என்ற பிரதமர் மோடியின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன்சம்பத் குற்றம்சாட்டினார்.

இந்து அதிரடிப்படையினர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டுமெனக் கோரி, தமிழகத்தின் புனித நதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் மற்றும் அனுமன் சிலையை அயோத்திக்குக் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய உள்ளனர். இந்த யாத்திரையைக் கோவை உக்கடம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன்சம்பத் தொடங்கி வைத்தார். 

இதையடுத்து, அர்ஜீன்சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "டிசம்பர் 6-ம் தேதியை கரசேவை வெற்றி தினமாக இந்து மக்கள் கட்சி கொண்டாடும். பிரதமர் மோடியின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டச் சிறப்பு சட்டம் இயற்றுவோம் என்ற வாக்குறுதி 4 1/2 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை. அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், திராவிடக் கட்சிகள், அம்பேத்கரைப் பற்றியும் அவரது கொள்கையைப் பற்றியும் தவறான கருத்துகளை பரப்புகின்றனர். அம்பேத்கர் இந்து மதத்தைச் சீர்திருத்த முயன்றார். அவருடைய நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ஐ.ஐ.டி.க்கு அம்பேத்கர் பெயரை வைக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...