திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த 3-ம் வகுப்பு பயிலும் சிறுமி, தான் உண்டியலில் சேர்த்த 1,000 ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையாக வழங்கிய நிகழ்வு அனவரையும் நெகிழச் செய்துள்ளது.

திருப்பூர் அறிவொளி நகரைச் சேர்ந்த சிவகுரு என்பவரின் மகள் சௌமியா ஶ்ரீ (8). இவர், தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு இவரது தந்தை தரும் சிறு சிறு தொகைகளை நீண்ட நாட்களாக உண்டியலில் சேர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகைகளை அனுப்பி வருகின்றனர். இதனை அறிந்த சௌமியா ஶ்ரீ, தானும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவி செய்ய எண்ணினார்.

அதன்படி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 1,000 ரூபாயை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்க முடிவு செய்தார். இதனையடுத்து, பெற்றோரின் அனுமதியுடன் தனது பாட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நிவாரணப் பொருட்கள் பெறும் மையத்தில் கொடுத்தார்.