மனித - விலங்குகள் மோதல் விவகாரம் குறித்து அனைத்து தரப்பினரும் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும்

கோவை : மனித - விலங்குகள் மோதல் விவகாரம் குறித்து அனைத்து தரப்பினரும் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், யானைகளை பிடிப்பது வெறும் தற்காலிகமான தீர்வே என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கோவை : மனித - விலங்குகள் மோதல் விவகாரம் குறித்து அனைத்து தரப்பினரும் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், யானைகளை பிடிப்பது வெறும் தற்காலிகமான தீர்வே என விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காட்டு யானைகள் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதனால், ஏற்படும் மனித-விலங்கு மோதல்களால், உயிர் பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக, சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு யானைகள்தான் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரி ஒருவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. 

இதனால், காட்டு யானைகளின் தொந்தரவை முறியடிக்கும் விதமாக, முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட பொம்மன், விஜய், சேரன் மற்றும் ஜான் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவை வரப்பாளையம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து மேலும் ஒரு கும்கி யானையான வாசிமை அழைத்து வர வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவது தொடர்பாக விவசாயிகள், தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள் ஆகியோரிடம் கோவை வன தலைமை பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸவா ஆலோசனை நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை வனப்பகுதிகளில் விரட்டும் பணிக்காக முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து மேலும் ஒரு கும்கி யானையான வாசிமை அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. காட்டு யானைகளை விரட்டுவதில் அனுபமுள்ள கும்கி வாசிம், அடுத்த 3 நாட்களுக்கு வன எல்லைகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கும்கி யானைகள் ஆபரேசன் தோல்வியடையும் பட்சத்தில், இறுதிகட்ட நடவடிக்கையாகக் காட்டு யானைகளைப் பிடிக்க திட்டமிட்டுள்ளோம், என்றார். 

முன்னதாக, மாவட்ட வன அதிகாரி டி. வெங்கடேஷ், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் 2-வது முறையாக தனியே ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்த போது முதற்கட்டமாக ஆலோசனை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையின் போது, கடந்த 7 நாட்களாக மனித - விலங்குகள் மோதல் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

"காலதாமதமான நடவடிக்கைகளில் விவசாயிகள் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகின்றனர். காட்டு யானைகள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அச்சுறுத்தி வருகின்றன. இருப்பினும், வனத்துறையினர் உறுதியை ஏற்று, வரும் காலங்களில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை பார்ப்போம்," என்கிறார் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. கந்தசாமி.

மேலும், வனவிலங்குகள் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில், பயிர்களின் சந்தை மதிப்பில் நிதியுதவி பெறுவது குறித்து, அடுத்த ஆலோசனை கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என நம்புவதாக அவர் கூறினார். 

இதனிடையே, மனித - விலங்குகள் மோதல் குறித்து அனைத்து தரப்பினரும் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நேற்று கோவை வனத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை விவசாயிகள் சந்தித்தனர். 

தற்போது, தடாகம் பகுதியில் தொந்தரவு செய்து வரும் 2 யானைகளை பிடிப்பது தீர்வாகாது. எங்களுக்கு நிரந்தரமான தீர்வு தேவைப்படுகிறது. இந்த யானைகளை பிடித்து சென்று விட்டாலும், வனப்பகுதியில் இருந்து வேறு யானைகள் மீண்டும் தொந்தரவு அளிக்கும்," என்றார் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி. கந்தசாமி.

எனவே, மனித - விலங்குகள் மோதல் விவகாரம் குறித்து அனைத்து தரப்பினரும் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும் என அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...