கோவை : கோவை பிரிக்கால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 302 ஊழியர்கள், சென்னை, உத்தரகாண்ட் உள்ளிட்ட பிற பகுதியில் உள்ள கிளைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை : கோவை பிரிக்கால் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 302 ஊழியர்கள், சென்னை, உத்தரகாண்ட் உள்ளிட்ட பிற பகுதியில் உள்ள கிளைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரிக்கால் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 144 பேருக்கு நிர்வாகம் பகுதி கதவடைப்பு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு தொழிலாளர்கள் பலருக்கு பணப்பிடிப்பு மற்றும் இதர தண்டனைகளை வழங்கியுள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கத்தின் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 100 நாட்களை கடந்து
பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமை சங்கமானது, அனைத்திந்திய தொழிற்சங்கங்களின் மத்திய ஆணையத்தில் (AICCTU) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சி.பி.ஐ.(எம்.எல்) கூட்டமைப்பிலும் இணைந்துள்ளது.
இந்த விவகாரம் தொழிலாளர் நல வாரியத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தொழிலாளர் துறை, பிரிக்கால் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்தது. இருப்பினும், ஒருசிலர் நிறுவனத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு பணிக்கு திரும்பி விட்டனர். மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை பணியில் அமர்த்தவும் பிரிக்கால் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொண்டு பணிக்கு வரும் தொழிலாளர்கள் அனைவருக்கு கோவையில் உள்ள தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு வழங்க இயலாத சூழல் நிலவி வருவதாக பிரிக்கால் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஊழியர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டிய பொறுப்பு, வேலை இழப்பைத் தவிர்த்தல், சமுதாய அமைதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கோவையிலும், இதர பகுதிகளில் செயல்படும் தங்களது தொழிற்சாலைளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி, 152 ஊழியர்கள் கோவை பெரியநாயக்கன் பாளையம் யூனிட்டிலும், எஞ்சியவர்கள் கோவையை தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள யூனிட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, 47 ஊழியர்கள் சென்னையில் உள்ள ஸ்ரீசிட்டி யூனிட்டுக்கும், 118 ஊழியர்கள் புனே யூனிட்டுக்கும், 137 பேர் உத்தரகாண்ட் யூனிட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.