கோவை : கோவையில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 195 பெண் பயனாளிகளுக்கு தலா ரூ. 25,000 மதிப்புள்ள மானியம் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

பெண்கள் பணிக்கு செல்வதற்கு உதவியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் எளிதாக இயக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காகப் பொருத்தப்பட்ட சக்கரங்கள் உடைய இருசக்கர வாகனங்கள் வாங்கலாம். அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 25,000, இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
சொந்த முதலீடு அல்லது வங்கிக்கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 சி.சி.க்கு மிகாமல் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண்களாக இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கணபதி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 195 பெண் பயனாளிகளுக்கு தலா ரூ. 25,000 மதிப்புள்ள மானியம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சற்று தாமதமாகவே கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் பகுதியாக, ஆவாரம்பாளையம் மேம்பாலத் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அடிக்கல் நாட்டினார்.