கோவை : சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஜி.வி. ரெசிடென்சியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் சரிவுப்பாதை (RAMP) திறக்கப்பட்டது.
கோவை : சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஜி.வி. ரெசிடென்சியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் சரிவுப்பாதை (RAMP) திறக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்வர்கா அறக்கட்டளை, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வங்கிகள், ஏ.டி.எம்.கள், அரசு பள்ளிகள், கோவை ரயில்நிலையம், கோவை காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பொதுஇடங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களின் வசதிக்காக சரிவுப்பாதையை (RAMP) அமைத்து வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, ஸ்வர்கா அறக்கட்டளை மற்றும் ராக் அமைப்பினர் இணைந்து ஜி.வி. ரெசிடென்சியில் சரிவுப்பாதை திறக்கப்பட்டது. இதனை ஸ்வர்கா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஸ்வர்னலாதா திறந்து வைத்தார்.