நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று உதகை மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகள் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் ஒரு சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இம்மாவட்டத்திற்கு வருகை புரிகிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுடன் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகள், டம்பளர்கள், தட்டுகள் போன்ற பொருட்களை வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் வீசி விட்டு செல்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகள் அதனை உட்கொண்டு இறக்கும் அபாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதித்தது. இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறையவில்லை. இதனால், அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களுக்கும், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உதகை மத்திய பேருந்து நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகள் தூய்மையாக உள்ளதா..?, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இருக்கிறதா..? என திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, உதகை படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றி மாற்று இடத்தில் சுழற்சி முறையில் கடைகளை அமைக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.