திருப்பூர் : திருப்பூரில் பனியன் நிறுவன மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை மற்றும் ரூ. 1.22 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவிநாசி அடுத்த தேவம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் வெள்ளதுரை. இவர், அதே பகுதியில் உள்ள ஏ.வி.பி. லட்சுமி அம்மாள் எக்ஸ்டன்ஸன் பகுதியில் தனது மனைவி மற்றும் மகனுடன் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை குடும்பத்துடன் திருநெல்வேலியில் உள்ள தனது பெற்றோரை சந்திக்க சொந்த ஊர் சென்று விட்டு, இன்று மீண்டும் காலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளிருந்த பொருட்கள் சிதறி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 சவரன் நகை மற்றும் ரூ. 1.22 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்ததையடுத்து, அவிநாசி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்த அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.