நீலகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்

நீலகிரி : உதகையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தின விழாவில் 50 பயனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் உதவி தொகையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி : உதகையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுதிறனாளிகள் தின விழாவில் 50 பயனாளிகளுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் உதவி தொகையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.



ஆண்டுதோறும் டிசம்பர் 3-ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உதகையில் இயங்கி வரும் தனியார் மருந்தாக்கியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள செயற்கை கால்கள், செயற்கை கைகள், பார்வையற்றோருக்கான கண் லென்சுகள், காது கேளாதோருக்கான காது கேட்கும் கருவிகள் மற்றும் உதவி தொகைகள் என 50 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சமூகத்துறை, மருத்துவத்துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...