கோவை : கோவை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தி மயக்கவியல் தொழில்நுட்பப் பயிற்சி முடித்தவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியதாவது :- கடந்த 2005-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மயக்கவியல் நிபுணர் கல்வி தொடங்கப்பட்டது. மருத்துவ கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்றுவிக்கப்பட்டு 5000-ம் மேற்பட்டவர்கள் பயின்று இதுவரை பயிற்சி முடித்து உள்ளது. பயிற்சி முடித்து 12 ஆண்டுகளாகியும், இதுவரை பயிற்சி முடித்தவர்களை பணியில் அமர்த்தாமல் 8-ம் வகுப்பு 10-ம் வகுப்பு வரை படித்தவர்களை வைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், அரசை நம்பி இந்த படிப்பை படித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்க வேண்டும். மயக்கவியல் நிபுணர்களைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள 376 அரசு அறுவை மையங்களில் தங்களை பணியமர்த்த வேண்டும், இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.