அடுத்த ஆண்டு ஜுலை மாதம் நடக்கும் புத்தகக் கண்காட்சி : புதிதாக 3 இலக்கிய விருதுகள் வழங்க முடிவு

கோவை : கோவை கொடிசியாவில் அடுத்த ஆண்டு ஜுலை 19-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில், முதல்முறையாக இந்த ஆண்டு முதல் 3 இலக்கிய விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவை கொடிசியாவில் அடுத்த ஆண்டு ஜுலை 19-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில், முதல்முறையாக இந்த ஆண்டு முதல் 3 இலக்கிய விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வழக்கமாக, ஆண்டுதோறும் ஒரு மூத்த படைப்பாளிக்கு இந்தப் புத்தகவிழாவை ஒட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயும், விருதுச் சிற்பமும் கொண்டது. இந்த ஆண்டு முதல் மேலும் 3 இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று வகைகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு, தலா ரூ. 25,000 மற்றும் விருதுச் சான்றிதழும் அடங்கியது.

இவ்விருதுக்குரிய படைப்புகள் 2017, 2018-ல் வெளியானவையாக இருக்க வேண்டும். பரிசு பெறுவோர் 1-1-2019 அன்று 40 வயதை மிகாதவர்களாக இருக்க வேண்டும். படைப்புகள் நூறு பக்கங்களுக்கு குறையாதவையாக இருக்க வேண்டும். [கவிதை நூல்களுக்கு விதிவிலக்கு] படைப்புகளை அது தன்னால் எழுதப்பட்டது, நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்னும் தற்சான்றுடன் அனுப்ப வேண்டும்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...