கோவை : மேட்டுப்பாளையத்தில் 9 ஆண்டுகளில் 3,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ள ஶ்ரீ ஜெயின் சங்கத்தின் 100-வது கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது.
கோவை : மேட்டுப்பாளையத்தில் 9 ஆண்டுகளில் 3,000 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ள ஶ்ரீ ஜெயின் சங்கத்தின் 100-வது கண் சிகிச்சை முகாம் இன்று நடைபெற்றது.
மேட்டுப்பாளையத்தில் ஜெயின் சங்கம் கடந்த 1975-ம் ஆண்டு மறைந்த எம்.பவரிலால் சாங்க்லாவை தலைவராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பக் காலத்தில் இருந்தே சங்கத்தின் சார்பில் பல்வேறு சமூக சேவைகள் நடைபெற்றுவந்தன. 43 ஆண்டுகளாகச் செயல்படும் இச்சங்கம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் தொட்டி ,பயணிகள் அமர கிரைநைட் பெஞ்சுகள் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ளது.
2009- ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையில், கோவை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடத்தி வருகின்றனர். ஜெயின் சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இதுவரை நடைபெற்ற 99 முகாம்களில் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 11 ஆயிரத்து 931 பேர்கள் கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 3ஆயிரத்து 59 நபர்களுக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்கத்தின் சார்பில் 100- கண்சிகிச்சை முகாம் மேட்டுப்பாளையம் ராமு கவுடர் கம்யூனிட்டி ஹாலில் இன்று நடைபெற்றது. ஜெயின் சங்கத்தலைவர் கிஷோர் சந்த் கோட்டரி தலைமை தாங்கினார். முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்தனர்.
இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பரிசோதனைகளைச் செய்து தேவையான ஆலோசனையும் வழங்கினர்.