கஜா புயல் நிவாரண பணிகளில் மனசாட்சி இல்லாதவர்களே அரசைக் குறை சொல்வார்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை : கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வழங்கியதற்கான நன்றி அறிவிப்பு மாநாட்டில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

கோவை : கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வழங்கியதற்கான நன்றி அறிவிப்பு மாநாட்டில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

கொடிசியா மைதானத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியாற்றும் ஊராட்சி செயலர்களுக்கு ஊதிய உயர்வு அரசாணை வழங்கியதற்காக நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அப்போது அவர் பேசியதாவது , "ஊராட்சி செயலாளர்களுக்கு 50 ஆயிரம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு நாடு போற்றும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளில் இரவு, பகல் என பாகுபாடில்லாமல் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஈடுபட்டிருந்தோம். 

கஜா புயலின் போது தமிழக அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால்தான் ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அரசு காப்பாற்றியுள்ளது. சாலைகளில் உள்ள மரங்களை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் வெட்டி அகற்றியதாலே, புயல் பாதித்த இடங்களைப் பார்வையிட திமுக தலைவர் ஸ்டாலின் வர முடிந்தது. 

மேலும், நிவாரண பணிகளில் மின்சாரத்துறை ஊழியர்களுக்கு அடுத்து, உள்ளாட்சி துறை ஊழியர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றினார்கள். கஜா புயல் நிவாரண பணிகளில் தமிழக அரசை மனசாட்சி உள்ள மக்கள் யாரும் குறைச் சொல்லமாட்டார்கள். மனசாட்சி இல்லாதவர்களால் தான் அரசைக் குறை சொல்ல முடியும். அப்படிக் குறை சொல்வதைக் கடவுளே பொறுக்கமாட்டார்." என்றார். 

இதையடுத்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புயல் பாதித்த இடங்களுக்கு மறுபடியும் பார்வையிட உள்ளதாகவும் இயல்புநிலை திரும்பும் வரை நிவாரணப்பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...