சென்னை : நாட்டின் முன்னேற்றத்திற்காக மோடி கூடுதலாக முயற்சி செய்கிறார் என பிரதமர் மோடியைப் பற்றி நடிகர் ரஜினி பெருமையாகப் பேட்டியளித்துள்ளார்.
சென்னை : நாட்டின் முன்னேற்றத்திற்காக மோடி கூடுதலாக முயற்சி செய்கிறார் என பிரதமர் மோடியைப் பற்றி நடிகர் ரஜினி பெருமையாகப் பேட்டியளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், படங்கள், தனது அரசியலில் தன் நிலைப்பாடு குறித்து இந்தியா டுடே இதழுக்கு ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்றொரு கேள்வி இடம் பெற்றிருந்தது.
அதற்குப் பதில் அளித்த ரஜினி," பிரதமர் மோடி நாட்டிற்கு நல்லது செய்ய விரும்புகிறார். அதற்காகக் கடினமாக முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் அவர் தன்னுடைய சிறப்பைக் கொடுக்கிறார். இப்போதைக்கு நான் இதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன்," எனக் கூறினார்.
அந்நேரத்தில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப்பற்றி பதிலளித்தவர், "தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. தமிழர்கள் ஆற்றல் வாய்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் யார், அவர்களின் திறமைகள், பலம், அறிவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டார்கள். அனைத்தும் இருந்தும் அவற்றை கையாளத் தெரியாமல் இருக்கிறார்கள்.
எனவே, தமிழக மக்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும். அவர்களிடம் வாக்குகளை பெறுவதைக் காட்டிலும் அதுவே முக்கியமானது," எனக் கூறியுள்ளார்.