கோவை : மேட்டுப்பாளையத்தில் 5 ஆண்டுகளாக காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டுப்பாளையத்தை அடுத்த வடமங்கலகரை அருகே உள்ள அம்சாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் வித்யா. இவரும் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், அரவிந்துக்கு வித்யா மட்டுமின்றி வேறு சில பெண்களிடமும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வித்யாவுக்கு தெரியவரவே, நேற்று அரவிந்தை தான் பணிபுரியும் இடத்திற்கு வருமாறு தொலைபேசியில் அழைத்துள்ளார். அங்கு சென்ற அரவிந்திற்கும் வித்யாவிற்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது. அரவிந்திற்கு வேறு சில தொடர்புகள் இருந்த காரணத்தால் வித்யாவை திருமணம் செய்ய மறுத்தது மட்டுமில்லாமல், வித்யாவை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, வித்யா நேற்றிரவு தனது தயாரிடம் நடந்தவற்றைக் கூறி வருத்தப்பட்டுள்ளார். வித்யாவின் தாயார் அவரைத் தேற்றி தூங்க வைத்துள்ளார். இந்நிலையில், வித்யாவை காலையில் காணவில்லை. அதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து வித்யாவை ஊரெங்கும் தேடி உள்ளனர். ஆனாலும், அவர் கிடைக்கவில்லை.
இதனால் பதற்றமடைந்த வித்யாவின் பெற்றோர் காரமடை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்பு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே பெண்கள் அணியும் காலணி மற்றும் அணியும் ஆடை இருப்பதாகத் தகவல் கிடைத்து. அந்த இடத்திற்கு விரைந்த போலீசார், கிடைத்த தகவல்களை ஆராய்ந்து அது வித்யாதான் என உறுதி செய்தனர்.

இதனையடுத்து, மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் வித்யாவின் உடல் தேடப்பட்டது. பல மணிநேர தேடுதலுக்கு பின் வித்யாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மேலும், காதலித்து தன் மகளை ஏமாற்றி அவளுடைய மரணத்திற்குக் காரணமான, அவரது காதலன் அரவிந்த் மீது நடவடிக்கை கோரி வித்யாவின் தந்தை சார்பில் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காரமடை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.