திருப்பூர் : கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், அவர்களின் துயரில் பங்குகொள்ளாமல் மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்திருப்பது தேவையற்றது என பா.ஜ.க.வின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பெருமாநல்லூரில் பா.ஜ.க. கட்சியின் மேற்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், "கஜா புயலால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், அவர்களின் துயரில் பங்கு கொள்ளாமல் மேகதாது விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் 4-ம் தேதி அறிவித்துள்ள போராட்டம் தேவையற்றது. அரசியல் நோக்கம் கொண்டது. விவசாயிகள் பயிர் பாதுகாப்பு செய்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நடத்திய அரை நிர்வாணப் போராட்டம் தேவையற்றது.
ஜக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதை தள்ளி வைக்கவேண்டும். மேகதாதுவில் திட்ட அறிக்கை தயாரிக்கும் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை. இதை தமிழக பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும். காவிரி விவகாரத்தை மத்திய அரசுதான் முடிவுக்குக் கொண்டு வந்தது," என்றார்.