நீலகிரி : கோத்தகிரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோத்தகிரியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் ஆண்டுதோறும் மாவட்ட நீதிபதி ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி, மாவட்ட நீதிபதி வடமலை கோத்தகிரி நீதிமன்றத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, அவரை கோத்தகிரி மாவட்ட உரிமையியல் நீதிபதி ஸ்ரீதர் வரவேற்றார். தொடர்ந்து, கோத்தகிரி காவல்நிலைய துணை ஆய்வாளர்கள் நசீர் மற்றும் கௌதம் தலைமையிலான காவல்துறையினர் அணி வகுப்பு மரியாதை செலுத்தினர். இதனையடுத்து, மாவட்ட நீதிபதி வடமலை கோப்புகளை ஆய்வு செய்தார்.