கோவை : சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

கிராண்ட் ரீஜன்ட் ஓட்டலில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் சார்பில் எதிர்கால தொழில்முனைவோர்கள் பயனடையும் வகையிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த கே.வி.ஐ.சி.யின் இயக்குநர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு இளம் தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். நாடு முழுவதும் தொழில்முனைவோர்களை உருவாக்க பிரதமர் மோடி முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், சிறு, குறு மற்றும் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறினார்.
இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட இளம் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை தொடங்குவதற்கான திட்டங்கள் மற்றும் யோசனைகள் பற்றி தெரிந்து கொண்டனர்.