செல்போன் கோபுரங்கள், பறவைகள் உள்ளிட்டவை மூலமாக அறிவியல் உண்மைகளை திரைக்கதையாக்கிய இயக்குநர் சங்கர்

கோவை : மனித வாழ்க்கையில் பறவைகளின் இன்றியமையாத பங்கு குறித்து தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் சங்கரின் 2.O திரைப்படத்தின் கதை பொதுமக்களுக்கு உணர்த்தியுள்ளது.

கோவை : மனித வாழ்க்கையில் பறவைகளின் இன்றியமையாத பங்கு குறித்து தற்போது திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இயக்குநர் சங்கரின் 2.O திரைப்படத்தின் கதை பொதுமக்களுக்கு உணர்த்தியுள்ளது. 

செல்போன்களை மனிதர்கள் பயன்படுத்த தொடங்கிய பின்னர், கார்ப்பரேட் நிறுவனங்களின் போட்டிகளால் அளவுக்கு அதிகமான ரேடியேஷன்களால் பறவை இனமே அழியும் ஆபத்து உள்ளது. இந்த அறிவியல் உண்மையை இயக்குநர் சங்கர் தனது 2.O படத்தில் வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார். பறவை இனங்கள் அழிவதால் செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க அக்சய்குமார் போராடுகிறார். ஆனால், எதுவும் பலனிக்காததால், ஒருகட்டத்தில் மனமுடைந்து செல்போன் டவரிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். 



அதன்பின் பறவைகளின் ஆன்மாக்களுடன் தன்னுடைய ஆன்மாவை இணைத்து ஐந்தாம் சக்தியை உருவாக்கி அந்த சக்தியின் உதவியால் செல்போன்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களைக் காப்பற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போரை தனது அனிமேஷன் படைப்பால் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும், விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதையும் அவர் விளக்கியுள்ளார். அதோடு, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் விவரங்களையும் இந்தப் படத்தில் இயக்குநர் சங்கர் புகுத்தியுள்ளார். 

இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உரியது. குறிப்பாக மனித இனம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் பறவைகள் நிச்சயம் வாழ வேண்டும் என்ற உண்மையை மிக ஆழமாக கூறியுள்ளார் இயக்குனர் சங்கர். 

பறவைகள் அழிவு குறித்து அண்மை காலமாக அறிவியல் அறிஞர்கள் ஆராய்ந்து வரும் நிலையில், நகர்ப்புறங்கள் வாழ்வதற்கு ஏற்றது அல்ல எனக் கருதிய பறவைகள் நகரங்களுக்கு அப்பால் சென்று விட்டன. 

இதே கூற்றை கடந்த 2014-ம் ஆண்டு நியூயார்க்கில் அமைந்துள்ள கர்னெல் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்கள் பெரிய பாதிப்பாக கருதப்படவில்லை. இதன் விளைவுகள் குறைவு அல்லது சரியான ஆராய்ச்சி மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஹவுஸ் கேட்ஸ்களினால் 240 கோடி பறவைகளும் மற்றும் கெமிக்கல் போன்ற நச்சுகளால் ஆண்டுக்கு 270 லட்சம் பறவைகள் கொல்லப்படுவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதோடு, கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தும் செல்போன் கோபுரங்களில் கூட சிட்டுக் குருவிகள் கூடுகள் அமைத்து வருவதையும் அந்தப் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது. 

எனவே, தற்போது திரையாகி ஓடிக் கொண்டிருக்கும் சங்கரின் எந்திரன் 2-ம் பாகம் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிப்படுத்தப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். 

கோவையை இயற்கை சொசைட்டியைச் சேர்ந்த பி.பி. பாலாஜி, இந்தப் படத்தில் மையக்கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட செல்போன் கோபுரக் காட்சி முதல் பயன்படுத்தப்பட்ட பறவைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

குறிப்பாக, செல்போன் கோபுரங்கள் பறவை இனங்கள் நிலைதடுமாறுகிறதா ..? என்ற கேள்விக்கு....இல்லை. புயல் காலங்கள் மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய இரவுப் பொழுதின் போது நட்சத்திரங்களைக் காண முடியாமல் போனால் மட்டுமே அவை நிலைதடுமாறும், என பதிலளித்துள்ளார்.

குருவிகளின் முட்டை ஓடுகள் செல்போன் கோபுர கதிர்வீச்சுகளினால் பாதிக்கப்படும் அளவிற்கு மெல்லியதா..? என்ற கேள்விக்கு, இல்லை. முட்டையின் ஓடுகள் பூச்சிக் கொல்லி மற்றும் கெமிக்கல் மருந்துகளின் பயன்பாட்டால் மட்டுமே பாதிக்கப்படுகின்றன, எனக் கூறியுள்ளார். 

நகர்ப்புறங்களை விட்டு குருவி இனங்கள் வெளியேறிவிட்டதாக கடந்த வியாழக்கிழமை சிறப்புக் கட்டுரையை சிம்ப்ளிசிட்டி வெளியிட்ட தினத்தில்தான் சங்கரின் 2.O திரைப்படம் வெளியாகியது. இதன் மூலம் மனித வாழ்க்கைக்கு பறவைகளின் பங்கு என்ன என்பது குறித்து பொதுமக்கள் மேன்மேலும் புரிந்து கொண்டனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...