வெளிமாநில உருளைக்கிழங்குகளின் வரத்து அதிகரிப்பால் நீலகிரி உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி

கோவை : மேட்டுப்பாளையம் சந்தைக்கு வெளிமாநில உருளைக்கிழங்குகளின் அதிகமான வரவால் உள்ளூர் உருளைக்கிழங்கு விற்பனை தேக்கமடைகிறது என விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையம் சந்தைக்கு வெளிமாநில உருளைக்கிழங்குகளின் அதிகமான வரவால் உள்ளூர் உருளைக்கிழங்கு விற்பனை தேக்கமடைகிறது என விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர். 

மேட்டுப்பாளையத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, நீலகிரி மாவட்டத்தில் பயிர் செய்யபட்டுள்ள உருளைக்கிழங்குகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் கிழங்குகள் ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. அதன்பின் அவற்றின் தரம் பிரிக்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது நீலகிரியில் உருளைக்கிழங்கு இரண்டாம் சீசன் துவங்கி நாளொன்றுக்கு 500 டன் முதல் 600 டன் வரை கிழங்குகள் வருகின்றன. ஆனால், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில கிழங்குகள் ஆயிரம் டன்களையும் தாண்டி தினசரி வந்து கொண்டிருக்கின்றன. கிழங்குகளின் வரத்து அதிகரிப்பால் அவற்றின் விலை குறைந்து காணப்படுகிறது. 



இதனால் மொத்த வியாபாரிகள் வெளிமாநில கிழங்கினையே அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். வெளிமாநில கிழங்குகள் குளிர் பதனக்கிடங்கில் இருப்பு வைத்து கொண்டு வரப்படுவதால் இதன் வரத்து ஆண்டு முழுவதும் சீராக உள்ளது. இதனுடைய விற்பனை அதிகமாக இருப்பதற்குக் காரணமும் அதுவே.

ஆனால், சுவை மற்றும் தரத்தில் முதன்மையானது நீலகிரி கிழங்குகள் தான். வெளிமாநில கிழங்கு வரத்தால் இதற்கு உரிய விலை கிடைப்பதில்லை. முதல் சீசனில் 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1400 முதல் ரூ.1700 வரை விற்பனையானது. தற்போது 2-ம் சீசனில் ரூ.900 முதல் ரூ.1200 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

மேலும், வெளி மாநில கிழங்கு வரத்து அதிகரிப்பால் ரூ.600 முதல் ரூ.750 வரை மட்டுமே விலை என்பதால், இதனையே வியாபாரிகள் டன் கணக்கில் வாங்கிச் செல்கின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...