கோவை: சாதி ஆணவப் படுகொலைகள் தடுப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பொள்ளாச்சியில் இன்று தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் சாதி ஆணவ படுகொலைகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இதனைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், தமிழக திராவிடர் கழகத்தினர் இன்று பொள்ளாச்சியில் உள்ள திருவள்ளுவர் திடலில், சாதி ஆணவ படுகொலைகள் தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அக்கட்சியைச் சேர்ந்த சண்முகவேல் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், சாதி ஆணவப் படுகொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர்.