நீலகிரி : உதகை அரசு அரசு தாவரவியல் பூங்காவில் காலநிலை மாற்றத்தால் அங்குள்ள மலர்கள் கருகும் நிலையில், சைக்லோன் மலர்கள் அதனை ஈடு செய்கிறது.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் இரண்டு சீசன்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதில், முதல் சீசன் ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் இரண்டாவது சீசன் அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஆகும். இந்தச் சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் லட்சக்கணக்கானோர் நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜாபூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டாசிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துச் செல்கின்றனர். இந்நிலையில், உதகையில் கடந்த சில வாரங்களாக உறைபனி, நீர் பனி மற்றும் மழை எனக் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர்கள் காய்ந்தும், அழுகியும் வருகின்றன. இதனால் பூங்காவினை காண வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்தை ஈடு செய்யும் வகையில், சைக்லோன் மலர்கள் பூத்துக் குலுங்குவது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.