கோவை: கோவையில் காட்டு யானையை விரட்ட வந்த கும்கி யானைக்கு மதம் பிடித்ததால் சாடிவயல் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

முதுமலை, சாடிவயல் யானைகள் முகாமிலிருந்து பன்னிமடை பகுதிக்குக் காட்டு யானைகளை விரட்டுவதற்காகக் கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டன. இதில், பொம்மன், சேரன், விஜய், ஜான் ஆகிய 4 கும்கி யானைகளும் வரப்பாளையம் முகாமில் யானைகளை விரட்டும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தன.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் ஜான் என்ற யானைக்கு மதம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, நேற்றிரவு வனத்துறை அதிகாரிகள் மற்ற யானைகளின் உதவியோடு ஜானை, லாரியில் ஏற்றி சாடிவயல் யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
மேலும், மதம் பிடித்திருக்கும் ஜான் இயல்பு நிலைக்குத் திரும்பும்வரை பணியில் ஈடுபடாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.