கோவையில் சொந்த வாகனங்களை டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியதாக 5 கார்கள் பறிமுதல்

கோவை: கோவையில் சொந்த வாகனங்களை டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவையில் சொந்த வாகனங்களை டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் 5 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை, கொடிசியா மைதானத்தில் மருத்துவர்களுக்கான மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்கு வந்திருக்கும் மருத்துவர்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு பகுதியில் இருந்து 900- க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் பலர் சொந்த கார்களை, டூரிஸ்ட் கார்களாக பயன்படுத்தி வருகிறார்கள் என டாக்ஸி ஒட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனைத்திந்திய டூரிஸ்ட் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சார்பில், வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்யப் புகார் அளிக்கப்பட்டது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் 300-க்கும் மேற்பட்ட சொந்த வாகனங்கள், டூரிஸ்ட் வாகனங்களாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. 



இதை தொடர்ந்து, அப்பகுதியில் உடனடியாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 5 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர் .

மேலும், டூரிஸ்ட் ஓட்டுநர்கள் கூறுகையில், "நாங்கள் டூரிஸ்ட் வாகனங்களுக்கு என்று தனியாக வரி செலுத்தி வரும் நிலையில், இது போன்றச் செயல்களால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது" என்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...