திருப்பூர் : திருப்பூரில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000 அபராதம் விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) என்பவர் திருப்பூரில் தங்கி ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த 28.9.2014 அன்று திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுவனை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அணைக்காடு கார்த்தி கார்டன் பகுதியில் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, ஆட்டோ ஓட்டுநர் ரவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, ரவியை கைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.