கூடலூர் பஜார் சாலையில் இருக்கும் சிமெண்ட் தடுப்பை மாற்றியமைக்கக் கோரி டி.எஸ்.பி.யிடம் வியாபாரிகள் மனு

நீலகிரி : கூடலூர் பஜாரில் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட சிமெண்ட் தடுப்பை மாற்றி அமைக்க கோரி டி.எஸ்.பி.யிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

நீலகிரி : கூடலூர் பஜாரில் சாலையின் நடுவே அமைக்கப்பட்ட சிமெண்ட் தடுப்பை மாற்றி அமைக்க கோரி டி.எஸ்.பி.யிடம் வியாபாரிகள் மனு அளித்தனர்.

மைசூர் - கூடலூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் கூடலூர் பஜார் செவிடிப்பேட்டை முதல் ராஜகோபாலபுரம் வரை நகரப் பகுதியில் அண்மையில் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலையின் நடுவே சிமெண்ட் தடுப்பு அமைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே இதற்கு வாகன ஓட்டுனர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலையின் இருபுறமும் போதிய அகலம் இல்லாத நிலையில், ஒரு வாகனம் மட்டுமே இயக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடைகள் மற்றும் வியாபார நிலையங்களை ஒட்டி ஆட்டோ உள்ளிட்ட மற்ற வாகனங்களை தேவையான இடங்களில் நிறுத்த முடியாமலும் உள்ளதோடு, சாலையை கடந்து செல்ல பொதுமக்களுக்கு போதிய இடைவெளி இல்லாததால் வாகன ஒட்டுனர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 

அனைத்து தரப்பினருக்குமான இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, கடந்த வாரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஒரு சில நாட்களில் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் நேற்று காலை கூடலூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடலூர் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று டி.எஸ்.பி ஜெய்சிங்கிடம் புகார் அளித்தனர். அப்போது, மீண்டும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்வு காண முடிவு செய்யப்பட்டதை அடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...